ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பதின் பருவம்

என்னை சுற்றி யாருமில்லை  சுதாரித்து கொண்டு..
அறைக்குள் புத்துணர்வுடன் புகுந்துகொண்டேன்..
சிற்றின்பம் வேள்வியை தீர்த்து கொள்ள நல்ல தருணும்..
மனதுக்குள் பல இச்சைகளை காட்சியமைப்பாய் நிறுத்திக்கொண்டேன்.. விளையாட்டு வேகத்தில் என்னை மறந்தேன் சில நொடி..                    முகமாறுதலில் கடைசி தருணத்தை அடைந்துவிட்டேன்..
வெளி வருகையில் அறை முழுக்க பயத்தில்
 இன்பத்தை சுயமாய் உணர்கிறேன் !

வியாழன், 21 பிப்ரவரி, 2013

புரிதல்

பள்ளியில் சிறந்த மாணவன்...
நல்ல நண்பன்...
கல்லூரியில் கலைகளில் சிறந்தவன்...
காதலியை அன்பால் கரையவைப்பவன்...
சமுக பார்வை உள்ளவன்..
உலக அரசியலை கற்றுஅரிந்தவன் ..
நல்ல பேச்சாளன்..
ஆனால் ஏனோ  என் கிழவியின்
தனிமையும்,  அன்பின்  ஏக்கத்தையும் , புரிந்து கொள்ளாத
      நகரவாசியானேன்  ?

புதன், 5 டிசம்பர், 2012

செவிகொண்டோர் பார்வைக்கு

சாதியற்ற சமுகம் வேண்டும் என்று சொன்ன பாரதியே
எங்கள் மக்கள் சாகும் நிலை பார்த்தாயா,

என்ன கேட்டோம் இந்த தமிழ்நாட்டில்
எங்கள் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது தாய் நாட்டில்..........

தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தள்ளிவைக்கும் சமுகமே
எங்கள் தரங்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு தர மட்டோயோ......

மக்களுக்காக போராடும் தோழர்களே
எங்கள் மக்களின் வீடுகள் சூறையாடப்படுவதை பார்த்தாயோ.....

எங்கே அடைந்து போனது
உங்கள் செவிகள்.......

எங்கே திசை மாறியது உங்கள்
பார்வை.........

வாயடைத்து போனதா உங்கள் நாவு....

பாதுக்காக்க குட ஆளில்லா சமுகம்மாக மாறும்
நிலை கண்டோம்...

மாற்று நிலை வாறதோ ஏங்கி தவிக்கும் எங்கள்
தாழ்த்தப்பட்ட இளைய சமுகம்.....

எங்கள் வலியை உங்களால் உணரமுடியாமல்
போனது ஏன்?

நாங்கள் தலித் என்பதாலா!